
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விட்ட இடத்தை பிடிக்க, நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் கையில் எடுக்கவே வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் காட்டுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். கூடா நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். குழப்பத்திற்கு உண்டான தீர்வுகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கடன் சுமை தீரும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறையோடு செயல்படுங்கள். தெரியாத மூன்றாவது நபரை நம்பாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆச்சரியங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். பெரிய பெரிய பிரச்சனைக்கு கூட சுலபமாக தீர்வு கிடைக்கும். இறையருள் பரிபூரணமாக கிடைக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாளாகவும் அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். கலைஞர்கள் மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையப்போகிறது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். பகை விலகும் நாள். சந்தோஷம் பிறக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீராத பகை தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். குழப்பங்களுக்கு உண்டான நல்லதொரு தீர்வு கிடைக்கும் நாள் இன்று.
Tags:
Rasi Palan