இன்றைய ராசிபலன் - 22.03.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சந்தோஷத்தை அதிகரிக்க செய்யும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். ஆனால் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஓய்வு எடுப்பதற்கு தான் நேரம் இருக்காது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களைப் பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பம்பரம் போல சுழன்று சுழன்று வேலை செய்வீர்கள். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி உங்கள் மீது விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்ளுங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவதற்கு முயற்சி செய்யலாம். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வெயில் சமயத்தில் வெளியில் சுற்றி திரியாமல் இருப்பது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையான உதவி தேவையான நேரத்தில் சரியாக கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். குழப்பநிலை விலகும். சந்தேகங்களுக்கு உண்டான பதில் கிடைக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக செய்ய துவங்கி வருவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். நேரத்தை மட்டும் வீணடிச்சிடாதீங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்ற பாதையில் செல்ல வழி கிடைக்கும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். தலைகுனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து நிற்க நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. அடுத்தவர்கள் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். சின்னதாக பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் வரை, பெரிய அளவில் கல்லாகட்ட வாய்ப்பு உள்ளது. சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் போவதே தெரியாது. விடுமுறை நாளாகவே இருந்தாலும் சில பேருக்கு இன்று தலைக்கு மேல் வேலை பளு இருக்கும். உடல் சோர்வு இருக்கும். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மனதில் சொல்லும். இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து நீங்க தவற மாட்டீங்க. விடா முயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்று தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபசெலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த மந்தமான நிலை விலகி முன்னேற்றம் காணப்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று சுக போக வாழ்வு இருக்கும். ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். சென்ற இடம் எல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். கலைஞர்களுக்கு ஆசிரியர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, தூக்கம் என்று இந்த விடுமுறை நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்ப சண்டைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். கடன் சுமையிலிருந்து விடுபட முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் செயல்படுவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டை சுத்தம் செய்ய மனைவிக்கு உங்களால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை செய்து மனதிருப்தி அடைவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here