எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் இன்றைய தினம் (22) வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இது குறித்துத் தெரிவிக்கையில், டீசல் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு மாற்றிமைக்கப்பட்ட புதிய கட்டண திருத்தம் இன்றைய தினத்திற்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்ட போதிலும், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக பேருந்து கட்டணங்களை உடனடியாக அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆரம்பத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.
எனினும்,போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு புதிய தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
