இஸ்ரேலின் திமோனா (Dimona) பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது, அதனைக் காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானால், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திமோனா பகுதியைத் தாக்கியுள்ளன. இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போதே நான்கு இலங்கையர்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த நான்கு இலங்கையர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்துத் தூதரகம் கண்காணித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் ஏனைய இலங்கையர்கள், தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படும் போது எவ்விதமான படப்பிடிப்புகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும், உடனடியாகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேலின் முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
Tags:
world news
