இன்றைய ராசிபலன் - 23.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியங்கள், இன்று வெற்றியை கொடுக்கும். முருகன் வழிபாடு செய்யுங்கள். வீட்டில் இருந்த சுப காரிய தடைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத நண்பர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். முருகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் பட்ட விஷயத்தை அப்படியே பளிச்சென்று வெளியே சொல்லாதீங்க. நேரம் காலம் சூழ்நிலை பார்த்து நடந்து கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும். முன்கோபம் வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கும். தேவையற்ற மன குழப்பங்கள் விலகும். நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களை போட்டு மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். கடவுள் உங்களுக்கு நல்லதை மட்டும் தான் கொடுப்பான். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இறை வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல நேரம் பிறக்க போகிறது. உங்களுடைய வேலைகள் எல்லாம் சுலபமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்த அரசாங்க செயல்பாடுகள் சரியாக நடக்கும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வாய்ப்புகளை கைநழுவ விடாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். தடைகள் விலகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். பல நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகள் சிறப்பாக நடந்து முடியும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் உயர்வு இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்தவர்களுக்கும் நல்ல செய்தி வந்து சேரும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணங்கள் நல்லபடியாக அமையும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம், புதிய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்கள் இனிமையாக இருக்கும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் அதிகரிக்கும். உற்சாகம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் பெரிசாக எந்த பிரச்சனையும் வராது. ஆனால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் நிறைய தண்ணீர் குடியுங்கள். வயதானவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவது, புது வியாபாரத்தில் முதலீடு செய்வது, புதுசாக அக்ரிமெண்ட் போடுவது இதுபோல விஷயங்கள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான, சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பெருசாக பிரச்சனைகள் இருக்காது. ஆனால் முதலீட்டில் மட்டும் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். காதல் வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. உயர் அதிகாரிகளை சமாளிப்பதில் மட்டும் கொஞ்சம் சிரமம் வரும் பார்த்துக்கோங்க.
Previous Post Next Post


Put your ad code here