எரிபொருள் தொடர்பான பேஸ்புக்கில் பதிவிட்டவர்: சிஐடியினால் கைது..!!!


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில், வத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுத்தல்,நாட்டின் சுற்றுலாத் துறையைப் பாதிப்படையச் செய்தல் மற்றும் பொதுமக்களிடையே தேவையற்ற அமைதியின்மையை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடனேயே இந்தத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எந்தவொரு செய்தியையும் அப்படியே நம்பிவிடாமல், உத்தியோகபூர்வ ஊடகங்கள் அல்லது அரச திணைக்களங்களின் அறிவிப்புகள் மூலம் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்த்த பின்னரே மற்றவர்களுக்குப் பகிர வேண்டும்.

தேவையற்ற அச்சத்தையோ அல்லது பொதுமக்களிடையே அமைதியின்மையையோ ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், தவறான தகவல்களைப் பதிவிடுவதோ அல்லது பகிர்பவர்களோ கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.

எனவே, பொறுப்புள்ள பிரஜைகளாக வதந்திகளைத் தவிர்த்து, இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here