சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..!!!


வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைகள், நிலைகள் மற்றும் பார்வைககளால் ஏராளமான யோகங்கள் உருவாகும். அதில் சில யோகங்கள் மங்களகரமானவையாகவும், சில யோகங்கள் அசுப விளைவுகளை ஏற்படுத்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு மங்களகரமான யோகம் தான் வைபவ லட்சுமி ராஜயோகம்.

இந்த யோகமானது ஏப்ரல் மாதத்தில் உருவாகவுள்ளன. அதுவும் இந்த யோகம் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மற்றும் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனால் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சுக்கிரன்.

இந்த சுக்கிரன் மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மேஷ ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

வேத ஜோதிடத்தில், இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தால் நிதி நிலையில் உயர்வு, புதிய வருமான ஆதாரங்கள், தொழிலில் வளர்ச்சி, வணிக விரிவாக்கம் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவ்வளவு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். இதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here