யாழில் ஒரு வருடத்தில் 62 கோடி ரூபாய் மோசடி..!!!


யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட மோசடிகள் மூலம் சுமார் 62 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் , மோசடிகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்.

கடந்த ஒரு வருட கால பகுதிக்குள், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக, இணையக் குற்றங்கள் ஊடாக, காணி விற்பனை உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக 225 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் - என்றார்.

Previous Post Next Post


Put your ad code here