இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கவுள்ளதாக சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலுக்கான விலையை 81 ரூபாயால் அதிகரித்து, 398 ரூபாய்க்கு, சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் 95 ரக பெற்றோலுக்கான விலையை 122 ரூபாயால் அதிகரித்து, 487 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது.
மேலும், ஒட்டோ டீசல் ஒரு லீற்றருக்கான விலையை 79 ரூபாயால் அதிகரித்துள்ள சினோபெக் நிறுவனம், 382 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யவுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 219 ரூபாயால் அதிகரித்து, புதிய விலையாக 572 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தங்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news
