புதன்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை: ஒன்லைன் வகுப்புகள்?


எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் ஒன்லைன் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்பதற்காக செவ்வாய்க்கிழமைகளில் வீட்டுப்பாடங்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய சுற்றறிக்கையின்படி, மறு அறிவித்தல் வரை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயங்கும். புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாணவர்கள் வீட்டிலிருந்து சுயமாகக் கற்பதற்கு ஆதரவாக, அவர்களுக்குப் பொருத்தமான பாடங்கள், பயிற்சிகள் மற்றும் பணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பாடசாலை அதிபர்களுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here