யாழ் கொழும்புத்துறை துண்டிச்சந்திப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை (16.03.2026) மாலை நடந்த வீதி விபத்தில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி சகோதரர்களான இருவரும் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். |
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது- 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது- 19) ஆகிய ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சகோதரி திருமணமாகி இரண்டு மாதங்களிலே இத் துயரச் சம்பவம் நடந்துள்ளமை மணியந்தோட்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.