
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிசக்தியைச் சேமிப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இணங்க, அனைத்து சர்வதேச பாடசாலைகள், அனைத்து தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், அனைத்து தொழிற்கல்வி நிறுவனங்களும் அதற்கேற்ப செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு இணங்கி, புதன்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news