எரிபொருள் நிலையங்களுக்கு செல்லும் முன் இதை கவனியுங்கள்..!!!



QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

"QR குறியீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாருங்கள். கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும். அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here