மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டுபாயின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மீண்டும் பலத்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டுபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் (Concourse) சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் நான்கு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, டுபாய் மற்றும் அபுதாபியின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அனைத்து விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Tags:
world news
