இன்றைய ராசிபலன் - 08.04.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவைக்கு அதிகமாகவே பணம் கையில் தாங்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்தையும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சேமிப்பு உயரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த சுகமான நாளாக இருக்கும். சரியான நேரத்தில் உங்களுடைய வேலைகளை முடித்து கொடுத்து விடுவீர்கள். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நிறைய நேரம் மிச்சம் இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகமாக இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். சோம்பேறித்தனம் விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். வேலையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பெருசாக சூடு பிடிக்காது. வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். முன் கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் நன்மை நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை வெளிப்படும். குடும்ப சண்டைகள் தீரும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கலைஞர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் வியாபாரத்தை இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சொந்த பந்தங்களோடு நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். கடமையிலிருந்து தவறக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். எதிரி தொல்லை விலகும். ஒரு வேலையை முழுசாக செய்து முடிக்க முடியாது. தடைகள் வந்து உங்களை துவண்டு போக செய்யும். கவனமாக செயல்படுங்கள். நிதானமாக செயல்படுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். எடுத்த உடனே ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. பலமுறை முயற்சி செய்த பிறகு உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். ஆனால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்தில் சந்தோஷம் குறையாமல் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.
Previous Post Next Post


Put your ad code here