யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
