இன்றைய ராசிபலன் - 29.04.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் மனக் கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனுபவ சாலைகளின் பேச்சைக் கேட்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் இன்று எடுக்காதீங்க. நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் சொந்த பந்தங்களோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டை போட வேண்டாம். நிதானத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு உங்களுக்கு எதிர்பாராத ஒரு தொகை வந்து சேரும், மனதிற்கு நிம்மதி தரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இது தவிர வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்‌. தேவைக்குஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பயணங்கள் நல்லபடியாக அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். உங்களுக்கான மரியாதை உங்கள் வீடு தேடி வரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ அந்த இடத்தில் எல்லாம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பல நாள் மனக்குழப்பம் மனக்கஷ்டம் நீங்கி இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உங்களுக்கான ஆதரவு கிடைக்கும். சபையில் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். குடும்ப பிரச்சினைகள் சரியாகும். குடும்ப பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களின் மூலம் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் முதியவர்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று துன்பங்கள் பறந்து போகும். இன்பங்கள் உங்கள் வீடு தேடி வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நாள் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல ஓய்வு இருக்கும். வேலையும் வியாபாரமும் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களுக்கான சௌகரியங்கள் ஒரு பக்கம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் வீண் விரைய செலவுகள் குறையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெருமையான நாளாக இருக்கும். காலரை தூக்கி விட்டுக் கொண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வியாபாரமும் வேலையும் சுமுகமாக செல்லும். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கும். ஒரு சில நாட்களில் அதுவும் சரியாகிவிடும். கவலை வேண்டாம்.
Previous Post Next Post


Put your ad code here