இன்றைய ராசிபலன் - 14.05.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். முகம் தெரியாத மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும். மாணவர்கள் கல்வியில் நிதானதோடு செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். தேவையான ஓய்வு கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இழந்த மன நிம்மதி திரும்பவும் கிடைக்கும். குடும்ப உறவுகளோடு ஒற்றுமை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள் இன்று.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று அதிக அலைச்சல் இல்லாமல் வேலைகளை செய்ய வேண்டும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ செலவுகளுக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்க தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு செயல்படுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோபத்தில் அதிகம் பேச வேண்டாம். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மௌனத்தை மட்டும் பதிலாக வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை பேசி பேசி பெரிசாக்கி விட வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய மனிதர்களின் அறிமுகம், புதிய அனுபவத்தை கொடுக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவார்கள். பிள்ளைகளுடைய மேல் படிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும்‌ குடும்ப ஒற்றுமை மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனாவசியமாக பேசி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கலாம். மனதிற்கு பிடித்த நபரோடு திருமணம் கை கூடி வரலாம். வேலை வியாபாரம் போன்ற விஷயங்களில் நீங்கள் எதிர்பாராத நல்லது நடக்கலாம். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். நாலு பேரிடம் உதவி கேட்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். எதிர்பாராத பிரச்சனைகள் வந்து உங்கள் நிம்மதியை கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. கவனத்தோடு செயல்பட வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். புதிய நண்பர்களை அறிமுகம் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியம் தராத உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி வெளிப்படும். மனசாட்சிக்கு விரோதமாக எந்த வேலையும் செய்ய மாட்டீங்க. நேர்வழியில் நடந்து கொள்வீர்கள். இதனால் புது எதிரிகள் உருவாகலாம். இருப்பினும் சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களின் பொருத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரம். தேவைக்கு ஏற்ப ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையான நாளாக அமையும். பிள்ளைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்தீர்கள். சுபசெலவுகள் ஏற்படும்.
Previous Post Next Post


Put your ad code here