மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்து இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை கையில் எடுத்து முடிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்று சேரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையான உதவிகள், தேவையான நேரத்தில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். கூடுதல் முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், உங்கள் கையை வந்து சேரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பண பிரச்சனை தீரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சேர்க்கையும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டுகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிரி தொல்லை விளக்கும். உயர் அதிகாரிகளோடு நல்ல நட்புறவு ஏற்படும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வங்கி கடன் முயற்சிக்கலாம். நல்லதே நடக்கும் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். வசீகரத் தோற்றமும், வசீகர பேச்சும் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றி விடும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வீட்டில் இருக்கும் முதியவர்கள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். அடுத்தவர்களை மட்டும் நம்பி எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. புது மனிதர்களை நம்பாதீங்க. உங்களுடைய ரகசியங்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக பேசும் போதும் சில சிக்கல்கள் வரலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வாழ்க்கையில் உயர்வான நாளாக இருக்கப் போகிறது. பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். ஒரு கௌரவமான சூழல் உங்களை சுற்றி உருவாகும். அது மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். மன சங்கடங்கள் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்ற உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். கமிஷன் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போதும் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நல்ல செயல்களை செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan