இன்றைய ராசிபலன் - 16.05.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்காது. உயர் அதிகாரிகளோடு பணிவாக பேச வேண்டும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நன்மைகள் தேடி வரும் நாள். உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏதேனும் தவறான முடிவுகள் எடுத்தால் கூட, கடவுள் உங்களுக்கு நன்மையை கொண்டு வந்து சேர்ப்பார். இன்று கெடுதல் உங்களை விட்டு தூரம் தள்ளி நிற்க போகிறது. வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றே ஓடிவிடும். நேரம் போவதே தெரியாது. ஒவ்வொரு நொடி பொழுதையும் உபயோகம் உள்ளதாக, நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக திகழ்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை. செய்யும் வேலையில் கவனம் தேவை. புது முடிவு எடுக்கும் போது பதட்டம் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானத்துடன் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். இதுநாள் வரை தடையாக இருந்த விஷயங்கள் எல்லாம் வெற்றியை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கான நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களுடைய பழக்கவழக்கத்தை துண்டித்துக் கொள்ளாதீர்கள். அனுபவசாலிகளின் பேச்சு இன்று உங்களுக்கு
நல்லதை செய்யும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களால் நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பகை விலகும். சொந்த பந்தங்களோடு நல்ல உறவு உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். இன்று நேரம் போவதே தெரியாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் உங்களை விட்டு விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். மாணவர்களுக்கு உயர் படிப்பை மேற்கொள்ள இருந்து வந்த தடைகள் விலகும். நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கொஞ்சம் சோகமான நாளாக தான் இருக்கும். மனக் கவலையால் உங்களுடைய அன்றாட வேலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு இருக்க வேண்டும். கவலைகளை ஓரம் வைத்து விடுங்கள். இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, இன்றைக்கான நாளுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள் போதும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலை வியாபாரம் என்று எந்த டென்ஷனும் இல்லாமல் இந்த நாள் சந்தோஷமாக இருக்க போகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து பதவி கிடைக்கக்கூடிய நாள். பிரமோஷனுக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுபவர்களுக்கு நல்லது நடக்கும். சரியான வாழ்க்கை துணை அமையாதவர்களுக்கு, நல்ல செய்தி உண்டு. இறைவனின் அருள் இன்று பரிபூரணமாக உங்களுக்கு இருக்கு. வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பல நாள் போராட்டத்திற்கு ஒரு வெற்றி கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
Previous Post Next Post


Put your ad code here