மின்சார கட்டணம் அதிகரிப்பு..!!!




2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்படும் எனக் மதிப்பிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை முன்னிலைப்படுத்தி, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதாக அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளதை அடுத்து, இந்த கட்டணத் திருத்தம் சுமார் 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே பாதிக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எஞ்சியுள்ள 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த புதிய கட்டணத் திருத்தம் பொருந்தாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here