மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. நீண்ட நாள் பகை ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கூடுமானவரை வெயில் சமயத்தில் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கை கூடிவரும். அனுகூலமான நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுக்களை மீண்டும் துவங்கலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். திறமைசாலிகளாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு நன்மை தரும்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். மனதிற்கு பிடித்த இடத்தில், படிப்பதற்கான சீட்டு கிடைத்துவிடும். சுப செலவுகள் ஏற்படும். எதிரி தொல்லையில் இருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். முடியாது என்றால் முடியாது தான். முடியும் என்றால் முடியும் தான். உங்களுடைய சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் நடப்பீர்கள். இந்த நாள் புது அனுபவங்கள் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் இருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வசீகரத் தோற்றத்தால் அனைவரையும் கவருவீர்கள். இன்டர்வியூக்கு போறவங்க, கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் என்று சக்ஸஸ் தான்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடை விலகும். விவசாய தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். பெருசாக பாதிப்புகள் இல்லை. உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்கள் கையில் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். குறிக்கோளை அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பேராசைப்படக்கூடாது. உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு கண்மூடித்தனமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கூடா நட்பில் இருந்து விலகி இருங்கள். எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள். வம்பு சண்டைக்கு செல்லக்கூடாது. முன்கோபம் வேண்டாம். இறைவழிபாடு செய்வது நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு ஆதரவாக நாலு பேர், உடன் இருப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக் கூடாது என்று தடுமாற்றம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். முன்கோபம் வேண்டாம். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. எந்த இடத்திலும் பொய் சொல்லாதீங்க. எந்த சூழ்நிலையை சமாளிக்கவும், உண்மை மட்டும் தான் உங்களுக்கு உதவி செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கடமையை முடிப்பதில் குறிக்கோளாக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் சின்ன பின்னடைவு வரும். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
Tags:
Rasi Palan