மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகிப் போகும். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று உங்களாலேயே நம்ப முடியாது. நிறைய எதிரிகள் எல்லாம் உங்களுடைய நண்பர்களாக மாறிவிடுவார்கள். பெரிய பெரிய பிரச்சனைக்கு கூட இன்று சுலபமாக தீர்வு கிடைக்கப் போகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். யார் வாயால் திட்டு வாங்கிக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் வாயால் பாராட்டு மழை பொழிய போகிறது. பல நாள் ஆசை நிறைவேறும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக்கொண்டிருக்கிறது. நீண்ட நாள் பண பிரச்சனை சரியாகும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் இழந்த நல்ல பெயரை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பயணத்தின் போது மட்டும் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் சின்ன சின்ன உடல் உபாதைகள் வரலாம் பாத்துக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் என்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள் துணிச்சலாக செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் பெருசாக பாதிப்புகள் இருக்காது. உங்களுடைய கவனம் எல்லாம் வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்யும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுடைய மனதை இன்று யாராலும் மாற்ற முடியாது. அடம்பிடித்து ஆர்பாட்டம் பண்ணி எப்படியாவது நீங்கள் மனதில் நினைத்த விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். கவனமாக செயல்பட வேண்டும். அவசர அவசரமாக முடிவை எடுத்து, ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இன்று வேகத்தோடு சேர்த்து, விவேகத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். உங்களுடைய காலரை தூக்கி விட்டுக் கொண்டு தெருவில் நடந்து செல்லலாம். பெரிய அளவில் சாதனை படைத்து மனநிறைவு பெறுவீர்கள். அவமானப்பட்ட இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். சூப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய ஞாபகங்கள் எல்லாம் உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும். சுகமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த கோவிலுக்கு சென்று, குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையும் வியாபாரமும் எப்போதும் போல சுமூகமாக செல்லும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டுகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனத்தோடு செயல்படுங்கள். கூடுமானவரை கைபேசி பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நன்மையை தரும்.
Tags:
Rasi Palan