இன்றைய ராசிபலன் - 27.05.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்கலாம். வியாபாரத்தை விரிவு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகளை மேற்கொள்ளும் போது கவனமாக செயல்பட வேண்டும். கூடுமானவரை இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொன்ன நேரத்திற்கு, சொன்ன வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடல் அசதி நீங்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பல போராட்டத்திற்குப் பிறகு ஒரு வெற்றி உங்கள் கையை வந்து சேரும். ஆகவே, எந்த பிரச்சனைகளை கண்டும் துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி இன்று உங்களுக்கான வெற்றியை தேடி தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து, வாழ்க்கையில் அடுத்த படியை தொடர, நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் நாள் இன்று.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நலமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த தடையும் வராது. உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பண பிரச்சனை குறையும். கடன் சுமை நீங்கும் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிரியாக இருந்தவர்கள் கூட, இன்று நண்பர்களாக மாறுவார்கள். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் இருந்தால் உங்களுக்கு தேவையான பொருட்களை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் குடும்பம் என்று எல்லா விஷயத்திலும் மனநிறைவு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள், சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதி பற்றாக்குறை இருக்கும். செலவுகளை குறைப்பது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு செயல்படுவீர்கள். சாதுரியமான பேச்சால் பல நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். பணம் விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.
Previous Post Next Post


Put your ad code here