ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. ஜோதிடத்தில் 'மகாலட்சுமி ராஜயோகம்' என்பது பணம், ஆடம்பரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய, மிகவும் மங்களகரமான கிரகச் சேர்க்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும்போது இந்த யோகம் உருவாகிறது. 2026-ஆம் ஆண்டு மே 14 முதல் மே 16 வரையிலான காலகட்டத்தில், இவ்விரு கிரகங்களும் மேஷ ராசியில் சஞ்சரித்து, இந்த மங்களகரமான யோகத்தை உருவாக்குகின்றன. ஜோதிடரீதியாக இந்த யோகம் சில ராசிகளுக்குப் பொருளாதாரரீதியாகவும், தொழில்ரீதியாகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். மகாலட்சுமி யோகத்தில் அவர்கள் பல லாபகரமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறைகளில் பெரிய வெற்றிகளை பெறப்போகிறார்கள். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடிவரலாம், மேலும் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படலாம்.
மகாலட்சுமி ராஜயோகத்தால் வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் வருமானம் ஈட்டலாம். அதைத் தவிர, அவர்கள் போட்டியாளர்களை இப்போது வீழ்த்தலாம். நிதி நிலைமை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நேர்மறையான பலன்களை அளிக்கக்கூடும். இந்த யோகம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலுமே மகத்தான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம், இதனால் லாபம் அதிகரிக்கும்.
வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் உள்ளன. மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பிரச்சனைகளில் இருந்து இந்த நேரத்தில் விடுபடுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய ஆரோக்கிய பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் அவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும் காலமாக இருக்கும். இந்த யோகத்தால் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த ராஜயோகத்தால் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் முதலீடுகளிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம்.
அவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் நிதி ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வேலைகளை மாற்ற விரும்புவோருக்கும் இந்த நேரம் சாதகமானது.
Tags:
Rasi Palan
