இன்றைய ராசிபலன் - 22.07.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம், வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யுங்கள். சம்பள உயர்வோடு நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பின்னடைவு வராது. உடன் இருப்பவர்களோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். கடன் சுமை குறையும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறை இருக்காது. தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வங்கி கடன் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். இறைவழிபாடு மனதிற்கு அமைதி தரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையான செலவாக தான் இருக்கும். கவலைப்படாதீர்கள், வருமானத்தை அதிகரிக்க கடவுள் நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பான். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு நல்ல புரிதல் இருக்கும் நல்லது நடக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத பிரச்சனையிலிருந்து விலகி நிற்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை சீரான போக்கு இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மன சஞ்சலங்கள் விலகும். சந்தேகங்கள் விலகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பிரச்சனைகள் பாதிப்புகள் வராது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன வாக்குவாதங்கள் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். சோர்வு வெளிப்படும். சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் செய்து முடிக்க முடியாது. பல போராட்டத்திற்கு பிறகு நிச்சயம் வெற்றி அடைய முடியும். முயற்சிகளை கை விடாதீர்கள். தேவையில்லாமல் மனதை அலைபாய விட வேண்டாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு தெளிவை கொடுக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன தடுமாற்றம் இருக்கும். மன பயம் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை கூட வெளிப்படையாக பேச மாட்டீர்கள். மனதிற்குள்ளேயே பல விஷயங்களை போட்டு பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள். இந்த நாளை கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். முன் கோபம் வேண்டாம். நிதானதோடு இருந்தால் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பிறருக்கு தேவையான உதவிகளை பார்த்து பார்த்து செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் புது அனுபவம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு ஆதரவாக உடன் இருப்பவர்கள் பேசுவார்கள். புது நண்பர்களின் அறிமுகம், புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வரும் பாத்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
Previous Post Next Post


Put your ad code here