செம்மணியில் போராட்டம்..!!!


செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here