கிளிநொச்சியில் டிப்பர் விபத்து..!!!


கிளிநொச்சியில், டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பாரதிபுரத்தை சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை உத்தியோகஸ்தரான இளைஞனே கை ஒன்று முழங்கைக்கு கீழ் சிதைவடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்

டிப்பர் கனகாம்பிகை குளம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து சம்பவத்தினை அடுத்து சாரதி அருகில் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்குள் சென்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Previous Post Next Post


Put your ad code here