யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்களும், சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Previous Post Next Post


Put your ad code here