மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான சந்தோஷமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகிவிடும். வேலையில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாக பழக வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். சிறிய தொழிலை பெருசாக விரிவுபடுத்தலாம். புது கடைகள் திறப்பதாக இருந்தாலும் திறக்கலாம். இந்த வாரம் உங்களுக்கு பெருசாக எந்த குறையும் வராது.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை சீராகக் கூடிய வாரமாக இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் மனநிறைவோடு இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனக்குறைவாக இருக்கக் கூடாது. அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது பிரச்சனைகளிலிருந்து விடுபட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் நல்ல லாபம் இருக்கும். உற்சாகத்தோடு உங்களுடைய தொழிலை கவனித்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கனவுகள் நிறைவேறும் வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய ஆசைகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை கைபிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. திருமண பேச்சு வார்த்தைகள் வீட்டில் நடக்க தொடங்கி விடும். சந்தோஷம் மனது நிரம்ப இருக்கும். ஆனால் வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்களுடைய கடமையிலிருந்து தவறக்கூடாது. குறுக்கு பாதையில் செல்லக்கூடாது பார்த்துக்கோங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. பம்பரமாக சுழன்று சுழன்று வேலையை முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சந்தோஷம் நிறைந்திருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்திவது அவசியம். இன்றைக்கான வேலையை இன்றே செய்யணும். நாளை தள்ளி போடாதீங்க. இல்லன்னா வார இறுதியில் எல்லாம் முட்டிக்கொண்டு நிற்கும் பாத்துக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். ஆனால் சுப செலவுகள் ஏற்படும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். குடும்பத் தலைவர்களுக்கு கண்களில் ரத்த கண்ணீர் வர வாய்ப்பு இருக்கு. கூடவே சேர்ந்து ஆனந்த கண்ணீரும் வரும் கவலைப்படாதீங்க. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் முதலீட்டில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பாட்னரை நம்பி மட்டுமே நீங்கள் எந்த வேலையிலும் காலை வைக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை கூட நீங்கள் ஒரு முறை சரி பார்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சங்கடங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தர முடியாது. தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். கடனுக்காக சரக்கு வாங்கியவர்கள் சொன்ன நேரத்தில் பணம் தராமல் இழுத்து அடிக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் உங்களுடைய வேலைகள் கொஞ்சம் சிரமம் ஆக்கப்படும். கவலைப்படாதீங்க வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் இந்த வாரத்தை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒன்று சேருவீர்கள். வேலையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம், சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். நல்ல மாற்றங்கள் தான் மனநிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் வியாபாரத்தில் பார்ட்னரோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சுமூகமான சூழ்நிலை நிலவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. முன்கோபத்தை குறைக்க வேண்டும். வேலையிலும் நிதானமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. அவசர அவசரமாக ஒரு முடிவை எடுக்கக் கூடாது. குறிப்பாக இருக்கும் வேலையை விடாதீங்க. எதாக இருந்தாலும் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் தேவை. பெரியவர்களை விட்டுக் கொடுப்பது, வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது, பிள்ளைகளிடம் பொறுமையாக பேசுவது போன்ற விஷயங்கள் இந்த வாரம் உங்களுக்கு நல்லது செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகங்கள் இருக்கிறது. குடும்பத்தில் முக்கியமான விஷயங்களை பேசி முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான நல்லதை செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். வாரத் தொடக்கத்தில் நிம்மதியாக இருந்தாலும் வார இறுதி நாட்களில் கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருக்கும். தொழிலில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து விடுவீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உயர் பதவியில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கீழே பணி செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை கொஞ்சம் யோசித்து எடுங்கள். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை வைக்கக் கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பிசியான வாரமாகத்தான் இருக்க போகின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் யாருக்குமே நேரம் இருக்காது. நீண்ட தூர பயணம் இருக்கும். வீட்டில் ஆன்மீக வழிபாடு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். இப்படி பிசியான இந்த வாழ்க்கை உங்களை கொஞ்சம் சோர்வடைய செய்யும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். வேலை யிலும் கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். தினமும் இரண்டு மணி நேரம் அதிகமாக வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அமையும். இருந்தாலும் உங்களுக்கான பாராட்டுமும் சன்மானமும் கிடைத்துவிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. ஆனால் குடும்பத் தலைவனுக்கு நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் வீண் செலவை குறைத்துக் கொண்டால் இந்த வாரம் ஜாலிதான். செலவை இழுத்து போட்டுக் கொண்டால் நீங்கள் காலிதான். யோசித்து செயல்படுங்கள். தொழிலில் ஒரு அனுசரணை தேவை. மேனேஜரை பகைத்துக் கொள்ளக் கூடாது. சக ஊழியர்களிடம் நட்புறவோடு இருக்க வேண்டும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். புதிய முதலீடு செய்யலாம் தொழிலை விரிவு படுத்தலாம்.