கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் இன்று ( 30) வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 593ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 35 பேரில் 24 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள கடற்படையினர். ஏனைய 11 பேரில் 8 பேர் குவைத்திலிருந்தும் 3 பேர் மாலைதீவிலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 781 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
802 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:
sri lanka news