யாழ்ப்பாணத்தில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு செயலாளர் சி.மோகன், இந்து மற்றும் பௌத்த குருமார்கள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here