பாட்டு எப்படி இருக்கு? கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி


இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தமிழ் திரையுலகில் உலகில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’96’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களிடம் தனது பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தால் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆச்சரியம் இருக்கும்

ஆம் இது குறித்து கோவிந்து வசந்தா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஏஆர் ரஹ்மான் அவர்கள் தான் கம்போஸ் செய்த பாடல் ஒன்றை என்னிடம் போட்டு காட்டி ‘பாடல் எப்படி இருக்கிறது என்ற கருத்தை சொல்லுங்கள்’ என்றார். பாடல் ஒலித்ததும் எனது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. சில நொடிகள் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த பாடலை நான் ரசித்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென காலிங் பெல் ஒலித்தது. நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். அப்போது தான் நான் கண்டது கனவு என தெரிய வந்தது’ என கோவிந்த் வசந்தா தான் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இந்த கனவு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நாளை வெளியாகவிருக்கும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் கோவிந்த் வசந்தா, தற்போது இரண்டு மலையாள படங்களுக்கும், ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post


Put your ad code here