டிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்


சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ திரைப்படத்தின் புரமோஷன் நேற்று முதல் தொடங்கிய நிலையில் மூன்று நாட்களில் சந்தானத்தின் மூன்று லுக்குகள் வெளியாகும் என சந்தானம் ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று வெளியான முதல் லுக் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது. இந்த லுக்கில் சந்தானம் உடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது போன்றும் ஒரே ஒரு பாத்திரத்தை மட்டும் அவர் கையில் வைத்து இருப்பது போன்றும் உள்ளது.

மேலும் இந்த லுக்கில் ஆனந்தராஜ், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் சந்தானத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருப்பது போல் உள்ளது. அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இந்த லுக்கை அதிர்ச்சியுடன் தான் பார்த்து வருகின்றார்கள்.

சந்தானம் ஜோடியாக அனஹா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த லுக் எப்படி இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');