குவைட்டிலிருந்து இலங்கையர்கள் விமானத்திற்குள் செல்லும்வரை அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.
அங்குள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் முன்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் விமானத்திற்குள் அல்லது இலங்கையில் வைத்தே தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.