நாளை, மே 30ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் ஊர்வலம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“நேற்று 28, வியாழன் அறிவிக்கப்பட்டவாறு மே 31, ஞாயிறு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.
ஜுன் 01 திங்கள் முதல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நேற்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்களில் மாற்றங்கள் இல்லை” என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Tags:
sri lanka news