கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள் (Video)

ஆய்வுகூட ஊழியர் ஒருவரை தாக்கிய குரங்குகள், கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் கொரோனா பரவக்கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில, ஆய்வு கூட ஊழியர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,அவரை குரங்குள் தாக்கின.

அவரிடமிருந்து 4 பேரின் ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் குரங்குகள் தூக்கிச்சென்றன.

மேற்படி நால்வரும் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இக்குரங்குகள் பறித்துச் சென்ற மாதிரிகளை மரத்தின் மீது அமர்ந்து கடிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ள.

இந்த சம்பவத்தால் குரங்குகள் கொரோனாவை பரப்பும் என்ற அச்சத்தில் மீரட் நகர மக்கள் உள்ளனர்.

சிகிச்சை பெற்றுவரும் கொவிட்19 நோயாளிகள் நால்வரின் இரத்த மாதிரிகளையே குரங்குகள் பறித்துச் சென்றதாக மீரட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.கே. கார்க் தெரிவித்துள்ளார்.

இக்குரங்களின் உடலில் மேற்படி இரத்தம் பட்டால் குரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுமா என்பது தெளிவில்லை எனவும் டாக்டர் எஸ்.கே.கார்த் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');