ஜப்பானில் கடும் மழையால் வெள்ளம்: 20 பேர் மரணம்..!!!


ஜப்பானின் தெற்கு தீவான கியுசுவில் நீடிக்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.

இதில் வெள்ளத்தில் மூழ்கிய முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து பதினான்கு சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு நிலச் சரிவினால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். முதியோர் இல்லத்தின் இரண்டாவது தளம் வரை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

200,000இற்கும் அதிகமானவர்களை வெளியேற்றுவதற்கு நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதோடு மீட்பு பணிகளுக்காக 10,000 படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடும் மழை வீழ்ச்சி பற்றி எதிர்வுகூறப்பட்டுள்ளது. மக்கள் உச்ச அவதான நிலையுடன் இருக்கும்படி பிரதமர் ஷின்சோ அபே அறிவுறுத்தியுள்ளார். குமாமோடோ மற்றும் ககோசிமா மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

குமா நதிக்கு மேலால் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டிருப்பது, கார்கள் மற்றும் வீடுகள் மூழ்கி இருப்பது புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த பிராந்தியத்தில் இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு மழைவீழ்ச்சியை கண்டதில்லை என்று காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here