ஹைட்ராக்சி குளோரோகுயீன் மற்றும் எச்.ஐ.வி மருந்தான லோபினாவிர் ஆகியவற்றை கொரோனாவிற்கான மருந்துகளாக பயன்படுத்த மேற்கொண்ட ஆராய்ச்சியை கைவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேரியாவிற்கான மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயீனை, உலக நாடுகள் பலவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயீன் மற்றும் லோபினாவிர் ஆகிய மருந்துகள் மீதான ஆய்வுகளின் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.
அதில் குறிப்பிட்ட இரண்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை மேற்கொண்டதில், இறப்பு விகிதம் குறையவில்லை என்பதால் ஒப்பீட்டு பரிசோதனையை கைவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் –19 வைரஸ் தொற்றுடன் தொடர்பில்லாத நோய்களின் சிகிச்சை சோதனைகளுக்கு அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியது.
Tags:
world news