பிக் பாஸ் 4ல் போட்டியாளராக வருகிறாரா அனிதா சம்பத்?


செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் 4ல் போட்டியாளராக வர போகிறார் என செய்தி வெளியாகி உள்ளது.

மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் காரணத்தினால் அடிக்கடி யாராவது ஒருவர் இணையத்தில் திடீர் வைரல் ஆவது உண்டு. அப்படி சென்ற வருடம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர் தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார். அவரது புகைப்படங்களையும், அவர் செய்தி வாசிக்கும் போது தமிழ் உச்சரிக்கும் விதத்தை பற்றியும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்தனர்.

இந்நிலையில் தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ள பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கும் முன்பு போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.

விஜய் டிவியை சேர்ந்த பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள் என கூறப்படும் நிலையில் தற்போது சன் டிவியில் பணியாற்றி வரும் அனிதா சம்பத் இதில் கலந்துகொள்ள உள்ளார் என்கிற தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அனிதா சம்பத் பற்றிய செய்தி உண்மையா என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துவிடும்.

அனிதா சம்பத் டிவியில் செய்தி வாசிப்பது மட்டுமன்றி சில திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார். விஜய்யின் சர்கார் உள்ளிட்ட படங்களில் அவர் செய்தி வாசிப்பவராகவே திரையில் தோன்றி இருப்பார். அனிதா சம்பத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் அவரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அனிதா சம்பத் கடந்த வருடம் தான் பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என ஏதாவது பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார் அவற்றுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Previous Post Next Post


Put your ad code here