ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு..!!!


ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு தினம் நாளை (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்வேறு சமயத்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் நாளைய காலை 7.30 க்கு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.

மேலும், கொழும்பு 7 இல் அமைந்துள்ள தெவட்டகஹ பள்ளிவாசலில் நாளை காலை 10 மணிக்கு துவா பிராத்தனைகள் இடம்பெற உள்ளன.

அத்துடன் நாளை மாலை 5.30 க்கு பெல்லன்வில ரஜமஹா விகாரையிலும்,

இரவு 7.45 க்கு தெஹிவளை விஷ்ணு ஆலயத்திலும் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here