ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விஷேட பூஜை..!!!



ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களால் இன்று (02) காலை ருத்திராபிஷேகமும் விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு முக்கியமான பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம். இது முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது. இந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து மக்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இறைவனுடைய அருள் துணை நிற்க வேண்டும் என அதே நேரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மிகப்பழமையான கட்சி அதனுடாக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற இறைவன் துணையிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்றார்.




Previous Post Next Post


Put your ad code here