செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம்...!!!


யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15ம் நாளான இன்று (01.09.2020)  இரதோற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

  இம்முறை நாட்டில் நிலவுகின்ற கோவிட் - 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஆலயத்தில் வழமையாக பெருவாரியான முறையில் இடம்பெறும் காவடி, பறவைக்காவடி முதலான நேர்த்திக்கடன்கள் தவிர்க்கப்பட்டு அமைதியான முறையில் திருவிழா இடம்பெற்றிருந்தது.

 விநாயகப்பெருமான், வேல்ப்பெருமான், சண்முகப்பெருமான் ஆகியோர் தனித்தனித் இரதங்களில் ஆரோகணித்து வெளிவீதி வலம் வந்தனர்.

இன்றைய உற்சவப்படங்களைக் கீழே காணலாம்.

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம். மகோற்சவம் - 2020 #மகா_இரதோற்சவம் 01.09.2020 - 14 ம் நாள் காலை - முழுப் புகைப்படத் தொகுப்பு.

 படங்கள்: பா.ரிஷிகேஸ்வர்



Previous Post Next Post


Put your ad code here