தந்தையான் இறுதிச்சடங்கின் பின் மகன் பதிவிட்ட உருக்கமான பதிவு...!!!





தனது தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்ததையடுத்து நடிகர் விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.


வசந்தகுமார் எம்.பி.(70) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 28ம் தேதி காலமானார்.

சென்னையிலுள்ள இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்பு ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 11:30 மணிக்கு இந்து முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமாரின் மனைவி மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.




இதில் விஜய் வசந்த் நடிகர் என்பதால் திரையுலகினரும் ஆறுதல் கூறியுள்ளனர்.

அப்பாவின் உடல் அடக்கம் முடிந்தவுடன், விஜய் வசந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு என் அப்பா சென்னை வந்தார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கனவு நனவானதும் அவர் தனது கிராமத்துக்கு ஓய்வெடுக்க ஒரு முழுமையான மனிதனாகத் திரும்பிச் சென்றுள்ளார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி." என்று பதிவிட்டுள்ளார்.





Previous Post Next Post


Put your ad code here