யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு ரௌடிகள் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.
எட்டுப் பேர் கொண்ட ரௌடிக்குழு வாள்களுடன் தாக்குதல் நடத்த சென்றனர். இதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் ரௌடிகளை வளைத்து பிடிக்க முயன்றனர். இரண்டு ரெடிளகள் சிக்கினர். ஏனைய ரௌடிகள் தப்பியோடி விட்டனர்.
மடக்கிப் பிடிக்கப்படும் போது இரண்டு ரௌடிகளும் வாள்களுடனேயே சிக்கினர்.
புத்தூரை சேர்ந்த மகாதேவன் கோகுலன் (30), ஆவரங்கால் மேற்கு புத்தூர் பகுதியை சேர்ந்த ரகு பியூரன் (25) ஆகிய இருவருமே மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இருவரையும் ஊர்மக்கள் நையப்புடைத்து சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைத்தனர். நையப்புடைக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு ரௌடிகளும், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.