மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : ஆசிரியர் உயிரிழப்பு..!!!


கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், நீர்வேலி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன.

சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here