ரிப்பர் வாகனம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.
உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளது.
சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது என்று அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.