மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா பரவல் தொடர்சியில் மேலும் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளமை இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அவர்களில் 05 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 108 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை அடுத்து ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
