மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொவிட்-19 கொத்தணி 21 மாவட்டங்களில் பரவியுள்ளது என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் மாத்திரம் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 160 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் சனத்தொகை அதிகம் என்பதாலேயே இவ்வாறு அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
