3 வாள்களுடன் இளைஞன் ஒருவர் திருநெல்வேலியில் கைது..!!!


வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

“அந்த வீட்டில் 3 புதிய வாள்களை மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று நண்பகல் குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.

அங்கு 3 வாள்களை மீட்டதுடன் அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here